Saturday, December 24, 2016

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை....

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கன்னாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் உங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.
பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கொடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா?

Friday, December 23, 2016

பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு.... பிறப்புச் சான்றிதழுக்கு மாற்று வாய்ப்புகள்

பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தி வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 1989ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது.

Sunday, December 18, 2016

கத்தார் நாடு தனது புதிய தொழிலாளர் சட்டங்களை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

கத்தார் நாடு தனது புதிய தொழிலாளர் சட்டங்களை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இச்சட்டங்கள் (13.12.2016) முதல் அமுல்படுத்தப்படுவதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்களின் வரத்து, வெளியேற்றம், தங்கியிருத்தல் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஆகியவற்றை வரையறுக்கும் விதத்தில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சட்டத்தின் திருத்தமாக வெளியிடப்பட்டிருக்கிறது.