அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...!!!
#முஸ்லிம்_மகளிர்_உதவும்_சங்கம் (MWAS)
முஸ்லிம் மகளீர் உதவி சங்கத்திற்கு(
#MWAS) நன்கொடை மற்றும் ஜகாத்தை வாரி வழங்குங்கள் !!!
9344150951- Jahan அக்கா
விழிப்புணர்வு கொடுங்கள் விண்ணப்பிக்க!!!
முஸ்லிம் பெண்களே விதவைகளே! ஏழை பெண்களே விண்ணப்பியுங்கள்! !
ஒவ்வொரு மாவட்டத்திலையும் இந்த
#சங்கம் உண்டு!!!
தட்டி எழுப்புங்கள்!!
சிறு தொழில் செய்ய பயிற்சி வேண்டுமா விண்ணப்பியுங்கள்!!
ஏழை முஸ்லிம் பெண்களே!!
கல்வி வேண்டுமா Phd வரை படிக்கனுமா உங்கள்
மாவட்ட MWAS யை நாடி செய்து கொடுக்க சொல்!!
உங்கள் மாவட்ட சங்கங்களை அணுகவும்.
சங்கத்தின் தோற்றம்:-
ஆதரவற்ற முஸ்லிம் விதவைகளுக்கு மாதந்தோறும்
#உதவித்_தொகை வழங்கி அவர்களுக்கு உதவும்பொருட்டு கர்நாடக நவாப் அவர்களால்
“முகம்மதியன் கோஷா விதவை சாரிட்டி”
என்ற பெயரில் 1.10.1892 ல் ஒரு சங்கம் துவங்கப்பட்டது.
பின்னர் இதன் பெயர்
“முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்”
என்று மாற்றியமைக்கப்பட்டது.
இச்சங்கம் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் (ம) அலுவல்சாரா சம்பள அலுவலர்
(கர்நாடக உதவிதொகைகள்)
(Pay master Carnatic stipends & Collector of Madras) அவர்களை தலைவராகவும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (ம) அலுவல்சாரா உதவி சம்பள அலுவலர் (கர்நாடக உதவித்தொகைகள்)
(Assitant Pay Master Carnatic Stipends
& PA (G) to the Collector of Madras)
துணைத் தலைவராகவும் கொண்டு இயங்கி வருகிறது.
அரசு மானியம் (1:1) வீதத்தில் கிடைத்தலும் அதன் நடைமுறையும்:-
மேற்படி முஸ்லிம் மகளிர் சங்கத்தின் உறுப்பினர்களின் சந்தா தொகையையும் பொதுமக்களிடமிருந்து பெறும் நன்கொடையையும் சேர்த்து தணிக்கை செய்தப்பின் எவ்வளவு தொகை வருகிறதோ
அதில் பாதித்தொகையை (50 சதவீதம்) அரசு மானியமாக
ஒவ்வொரு ஆண்டும் வழங்கிட அரசாணை(நிலை)எண்
406 பொதுத் (அரசியல்) துறை நாள்1.8.1991 ல்
சங்கங்கள் பதிவுச்சட்டம் XXI of 1860 ன் கீழ்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அரசாணை (நிலை) எண் 77பிவ,மிபிவ(ம)சிந (எஸ்1) துறை, நாள் 11.12.2001 ன் படி ஒவ்வொரு ஆண்டும் மேற்படி சங்கம் வசூலிக்கும் மொத்ததொகைக்கு இணையான தொகையை மானியமாக வழங்கிட அரசு உத்திரவிட்டுள்ளது.
1991 -ல் இந்த சங்கத்திற்கு மானியம் வழங்குதல் சட்டபூர்வமாக அங்கிகரிக்ப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் 2001-ல் தான்
#மானியம் இந்த சங்கத்திற்கு வழங்குதலே வருது.
பத்தாண்டுகால இடைவெளி ..
நமக்கு விழிப்புணர்வு இல்லாததே இந்த பத்தாண்டு
கால இடைவெளி
மேற்படி சங்க அமைப்பினை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சங்கங்களின் பதிவுச்சட்டதின் கீழ் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் என்ற பெயரில்
துவங்கிட அரசு ஆணை நிலை எண் 14, பிற்படுத்தப்பட்டோர்,
மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நலத்துறை நாள் 23.4.2007 ல் உத்திரவிடப்பட்டு
செயல்பட்டு வருகிறது.
அதாவது,
2007-கலைஞர் நடைமுறையை படுத்தினார் அதாவது 1991 Act ஐ தமிழ்நாட்டில் மானியம் வழங்கும்
#சட்டம் 2001 ல் வந்ததையும் குறிப்பிட்டு நடைமுறை படுத்தினார்.
அதாவது
For example,
மாவட்ட சங்கம் 4 லட்சம் திரட்டி கொடுத்தால் Govt 4 லட்சம் கொடுக்கும் Total 8 லட்சம் வருமாம்.
(1:2) என்ற விகிதத்தில் மானியம் வழங்குதல்:-
அதை கடைசிகாலத்தில் ஜெ 1:2 ஆக ஆக்கியுள்ளார்.
அதாவது
For example,
நாம 4 லட்சம் திரட்டி குறிப்பிட்ட மாவட்டத்தில் திரட்டி கொடுத்தால் Govt 8 lakhs தறுமாம். So totally 12 lakhs.
கொஞ்சம் தாமதம் ஆகும் ஆனால் அரசுமானியம் கிடைத்துவிடும் ஒவ்வொரு ஆண்டும்
இச்சங்கங்களின் முக்கிய நோக்கங்கள் யாவை ?
அ) ஆதரவற்ற / ஏழை/ வயதான முஸ்லிம் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குதல் மற்றும் தேவையான பிற உதவிகள் வழங்குதல் மற்றும் விதவைப் பெண்களில் மறு திருமணத்திற்கு நிதியுதவி செய்தல்.
ஆ) ஆதரவற்ற / ஏழைப் பெண்களுக்கு வியாபாரம், தொழில், கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி அளித்தல் மற்றும்
வியாபாரம் தொடங்க (அல்லது) தொழில் செய்ய நிதி
#உதவி அளித்தல்.
இ) மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகள் இவர்களுக்கு கிடைக்க உதவி செய்தல்.
ஈ) முஸ்லிம்
#மகளிர் மற்றும் குழந்தைகள் கல்வி பயில உதவித் தொகை வழங்குதல் மற்றும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான பிற உதவிகள் செய்தல்.
உ) முஸ்லிம்
#பெண்கள் சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தி தேவையான பயிற்சிகள் அளித்தல் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் பலதரப்பட்ட
கடனுதவிகளைப் பெற்றுத் தந்து
தொழில்/ வியாபாரம்
துவங்க உதவுதல்.
இந்த மாணவியர் இல்லங்களில் சேர்வதற்கான தகுதிகள் எவை ?
அ)இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவியராக இருத்தல
#தமிழக_அரசு வழங்கி வருகின்றது.
இச்சங்கத்தில் உறுப்பினராகச் சேருவதற்கு யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?
உறுப்பினர்
#கட்டணம் எவ்வளவு ?
புரவலர் உறுப்பினர், ஆயுள் உறுப்பினர், சாதாரண உறுப்பினர் ஆகிய மூன்று வகை உறுப்பினர்களில் ஏதாவது ஒரு உறுப்பினராகச் சேர இச்சங்கத்தின் செயலாளர் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்;
புரவலர் உறுப்பினருக்கு ஒரே ஒருமுறை ரூ.5000/- உறுப்பினர் கட்டணம் செலுத்தவேண்டும்.
ஆயுள் உறுப்பினராகவும் ஒரே ஒருமுறை ரூ.1,000/- செலுத்தினால் போதுமானது.
சாதாரண உறுப்பினராகச் சேர ஆண்டுதோறும் ரூ.500/- உறுப்பினர் சந்தா செலுத்தவேண்டும்.
இதனைத் தவிர சாதாரண உறுப்பினர்கள் சேர்க்கைக் கட்டணம் ரூ.100/-ம் செலுத்தவேண்டும்.
தனிநபர்கள் மட்டுமல்லாது நிறுவனங்களும் உறுப்பினராகச் சேரலாம்.
இச்சங்கங்கள் அதன் நிதி ஆதாரத்தை எப்படி திரட்டுகின்றன ?
இச்சங்கங்கள் உறுப்பினர் கட்டணம்/சந்தா
மற்றும் நன்கொடை வசூல் மூலமாக நிதியைத் திரட்டுகின்றன.
தமிழக அரசு முன்னரே குறிப்பிட்டவாறு சங்கங்கள் திரட்டிய நிதிக்கு இணை மான்யமாக ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சம் (1:2) விகிதத்தில் ஆண்டுதோறும் வழங்குகின்றது.
இச்சங்கங்களிடம் உதவி பெறுவதற்கான தகுதிகள் என்ன?
அ) முஸ்லிம் மகளிர் அல்லது பெண் குழந்தையாக இருத்தல் வேண்டும மற்றும்
ஆ) ஆதரவற்றவராக/ ஏழையாக/ முதியவராக/ விதவையாக இருத்தல் வேண்டும்.
1:2 இச்சங்கங்களிடம் உதவி பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?
உதவி பெற தகுதியுள்ளவர்கள் அவர்களது உதவிக் கோரிக்கையை எழுதி இச்சங்கத்தின் கௌரவச் செயலாளர் (அல்லது) இணைச் செயலாளரிடம் விண்ணப்பிக்கவேண்டும்.
ஒருவனை வாழவைத்தால் முழு உலகையும்
வாழவைத்ததிற்கு சமம்