Friday, June 1, 2018

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வாணிபத்தில் DA என்றால் என்ன?



DA என்பதன் விரிவாக்கம் Documents against Acceptance. இந்த முறையில் ஒரு ஏற்றுமதியாளர் சரக்கை அனுப்பிவிட்டு ஆவணங்களை வங்கியில் சமர்பிப்பார். வங்கி அதை இறக்குமதியாளர் வங்கிக்கு அனுப்பும். இறக்குமதியாளர் ஒரு உறுதிமொழி கடிதம் (நான் குறிப்பிட்ட நாளில் பணம் கட்டி விடுகிறேன் என்று) மட்டும் கொடுத்துவிட்டு அந்த ஆவணங்களை பெற்று துறைமுகத்தில் இருந்து சரக்கை பெற்றுகொள்வார். இந்த வழிமுறை சற்று ஆபத்தானது என்பதால் நன்கு தெரிந்த இறக்குமதியாளரிடம் மட்டுமே இதுபோன்ற நடைமுறையில் தொழில் செய்யலாம். புதியவர்களிடம் இப்படி தொழில் செய்வது ஆபத்தானது.
நன்றி : பாலாஜி பொன்னம்பலம்