Thursday, November 23, 2017

ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம்-NIEPMD

இந்த பதிவு பகிர்வதற்காக நண்பர்களே..
எங்கோ ஒரு உடல் ஊனமுற்ற ஜீவன் தங்களின் பகிர்வால் பயனடையலாம்.
மாற்றுத் திறனாளி குழுக்கள் மற்றும் சங்கங்கள், தனிப்பட்ட நபர்கள் அனைவருக்கும்.
அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் தங்களுக்கு தேவையான எல்லா விதமான மருத்துவம் மற்றும் உபகரணங்களும் இலவசமாக பெற ஐந்து முதல் பத்து பேர் வரை குழுவாக அல்லாது தனியாகவோ வந்து முழு இலவச பரிசோதனை முடிந்ததும் அவர்களுக்கு தேவையான எந்த விதமான உபகரணங்கள் ஆயினும் குறிப்பிடும் தேதியில் சென்று நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்..

Thursday, August 24, 2017

Posted Date : 07:46 (24/08/2017) Last updated : 07:51 (24/08/2017) மாதச் சம்பளதாரர்கள் ஆன்லைன் மூலம் பி.எஃப் பணம் எடுப்பது எப்படி?

நம் நாட்டில் மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும், பி.எஃப் கணக்கு இருக்கும். ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் பணத்தை இதுவரை படிவம் மூலமாக விண்ணப்பித்துப் பெற்றுவந்தோம். இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. 
பணம்,


பி.எஃப் இதற்கு முன்...

உங்களுடைய பி.எஃப் பணத்தை நீங்கள் எடுக்க வேண்டுமெனில், நீங்கள் வேலைபார்த்த நிறுவனத்தின் கையொப்பம் அவசியமாக இருந்தது. பி.எஃப் பணத்தை எடுக்கும்போது படிவம் எண் 19, 10சி ஆகியவற்றைப் பூர்த்திசெய்து வேலைசெய்யும் நிறுவனத்திடம் தர வேண்டும். அதன் பிறகு அந்தப் படிவம், நிறுவனத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். நிறுவனம் ஒப்புதல் அளித்த பிறகு, அந்தப் படிவம் பி.எஃப் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். ஊழியர், பி.எஃப் பணத்தை எடுப்பதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து அதனுடன் வங்கிக்கணக்கு விவரம், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை இணைக்க வேண்டும். எல்லா வேலைகளும் முடிந்து இறுதியாக பி.எஃப் செட்டில்மென்ட் பணம் நேரடியாக ஊழியரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இதுதான் இதுவரை பி.எஃப் பணத்தை எடுக்கும் நடைமுறையாக இருந்தது. 
இதுமட்டுமின்றி நாம் பணிபுரியும் நிறுவனத்தில் ஏதோ ஒரு பிரச்னை காரணமாக அந்த நிறுவனத்தின் வேலையிலிருந்து விலகியவர்களுக்கு, பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறுவது என்பது பிரச்னையாகவும் சிக்கலாகவும் இருந்தது. இப்போது இந்த அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வேலைபார்க்கும் நிறுவனத்தின் கையொப்பம் இல்லாமல் பி.எஃப் பணத்தை எளிதாக ஆன்லைனில் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. 
BF
பி.எஃப் பணத்தை ஆன்லைனில் எடுக்கும் முன், உங்களுக்கு `யு.ஏ.என்' (Universal Account Number) எனச் சொல்லப்படும் யுனிவர்சல் கணக்கு எண் அவசியம். இந்த எண்ணை, நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனத்தில் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். யு.ஏ.என் எண்ணைக் கேட்டு வாங்கிய பிறகு, இந்த எண்ணை பி.எஃப் வலைதளம் மூலம் ஆக்டிவேட் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது நீங்கள் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் எந்தத் தொலைப்பேசி எண்ணை வழங்கினீர்களோ, அந்த எண் பயன்பாட்டில் இருக்க வேண்டும். அந்த எண்ணைப் பயன்படுத்தி யு.ஏ.என் எண்ணை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். 

ஆன்லைன் மூலம் பி.எஃப் பணம்! 
யு.ஏ.என் எண்ணை ஆக்டிவேட் செய்த பிறகு, பி.எஃப் வலைதளத்தில், உங்களுடைய பி.எஃப் கணக்கின் கே.ஒய்.சி ஆவணத்தில் ஆதார் விவரத்தை இணைத்திருக்க வேண்டும். இதுமட்டுமின்றி, பி.எஃப் சந்தாதாரர்கள் தங்களது யு.ஏ.என் எண்ணுடன், வங்கிக்கணக்கு, மொபைல் நம்பர் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைத்திருந்தால், பி.எஃப் பணத்தை ஆன்லைன் மூலம் எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் மூலம் பணம் எடுப்பதைப் பொறுத்தவரை மிக முக்கியமாக பி.எஃப் கணக்குடன் வங்கிக்கணக்கு எண், ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் யு.ஏ.என் எண்ணை அவசியம் இணைத்திருக்க வேண்டும்.
நன்றி : http://www.vikatan.com/news/tamilnadu/100112-how-to-take-pf-money-for-monthly-payers-online.html

Thursday, July 27, 2017

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.!!


சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.!! 
இனி ஏஜன்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டிய அவசியம் இல்லை. 
---------'--'
சிங்கப்பூரில் (work permit) ல் வேலை பார்ப்பவர்கள் தங்களது விசா முடியும் பொழுது சிங்கப்பூரில் இருந்து கொன்டே வேறு நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் அதற்கான வாய்ப்பை சிங்கப்பூர் அரசாங்கமே (Ministry Of Manpower) ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதற்கு செய்ய வேண்டியதாவது, நிறுவனம் மாற விரும்புவபர்கள் தங்களது முழு விவரத்தையும் FCWDS (Foreign Construction Workers Directory System) ல் பதிவு செய்து விட்டு மேலும் நீங்கள் தற்பொழுது வாங்கி கொண்டிருக்கும் சம்பளம் & எதிர்பார்க்கும் சம்பளம் , உங்களுக்கு என்ன வேலை தெரியும், வேலை அனுபவம, மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற முழு தகவலையும் அவர்களிடம் தெரிவித்து விட வேண்டும். 
அதன் பிறகு அவர்கள் உங்களுக்கு சரியான நிறுவனத்தை கண்டுபிடித்து நேர்கானலுக்கு ஏற்பாடு செய்து தருவார்கள் (இதற்கு கட்டணம் $176 மட்டுமே) இதன் கால அவகாசம் 90 நாட்கள். அதாவது உங்களது விசா முடிவடைய 90 நாட்களுக்கு முன்பே இதை செய்ய வேண்டும். 
குறிப்பு: 
புதிய நிறுவனத்திற்கு மாறுவதற்கு தற்பொழுது வேலை செய்யும் நிறுவனத்தின் அனுமதி கடிதம் தேவை இல்லை.

Monday, July 10, 2017

UAE செல்பவர்கள் கவனத்திற்கு....

UAE செல்பவர்கள் கவனத்திற்கு ....புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது...
Work visa employment visa வில் செல்பவர்களுக்கு....
முதலில் செய்ய வேண்டியது...