சமூக சேவகரை பாராட்டுவோம்..!
சவுதி அரேபியாவில், ரியாத் மாநகரில் சொந்தமாக சிறு தொழில் நடத்தி வரும் (சேட்டு) என்று செல்லமாக அழைக்கும் இவருடைய பெயர் ஜமால், இவரின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர்..!
பல வருடங்களாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனுக்காக மட்டுமே அடி பணிந்து, சேவை செய்து வருகிறார்..!
குடும்ப கஷ்டங்களுக்காக தாய், தந்தை, மனைவி, மக்களை இழந்து வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வரும் மக்களில் சிலர் இயற்கையாகவோ, விபத்திலோ, இறந்து போய்விடும் சூழ்நிலைகளில், அதை எப்படி எதிர்கொள்வது, மாற்றுமத சகோதரர்கள் பெரும்பாலானோர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும்போது, அதை எளிதில் முடித்து கொடுத்து உதவி செய்து வருகிறார்..!!
இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் உடல்களை அடக்கம் செய்வதற்க்கும், ஊருக்கு அனுப்பவும் உதவியுள்ளார்..
இந்திய தூதரகம் மற்ற விஷயங்களில் எப்படியோ, இறந்தவர்கள் விஷயத்தில் உதவியாக இருப்பதாகவும் கூறுகிறார்..!
சகோதரருக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்..!
இவரின் தொடர்பு எண்: 0507863307,
அன்புடன்; நம்புதாளை ஃபாரிஸ்,
ரியாத், சவுதி அரேபியா..
No comments:
Post a Comment